என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவமனை கட்டிட விபத்து"
கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் தனியாக முறையீட்டு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
‘‘300 ஏக்கர் உள்ள இந்த நிலம் அரசின் புறம்போக்கு நிலம் என்றும், இந்த நிலத்தை முறைகேடாக அரசு அதிகாரிகள் தனியாருக்கு வழங்கி உள்ளனர்.
இவ்வாறு அரசு நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது. இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூறையீட்டு மனுவை அனுமதித்த நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரை கொண்ட அமர்வு, இம்மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.
சென்னை கந்தன்சாவடி மருத்துவமனையில் கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்த இடத்தை தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்றையதினம் இரவு சுமார் 7.15 மணி அளவில் ஏற்பட்ட இந்த விபத்து பற்றி அறிந்ததும் அனைத்து துறை அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு மீட்பு பணிக்கு உதவினார்கள்.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் பப்லு என்பவர் உயிர் இழந்தார். 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 5 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளனர். 16 பேர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக உள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என முதல்- அமைச்சர் கூறி உள்ளார். எனவே தனியார் ஆஸ்த்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டாம் என்று நேற்று இரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா கூறுகையில், “கட்டிட விபத்து குறித்த விசாரணை அறிக்கைப்படி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். காயம் அடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மாநில பேரிடர் மீட்பு குழு கமிஷனர் ராஜேந்திர ரத்னு கூறுகையில், “மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். சரிந்து விழுந்துள்ள ராட்சத இரும்பு தூண், சாரம், கம்பிகள் கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் மீட்பு பணிகள் முடிந்து விடும் என்றார்.
விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவகர் சண்முகம் கூறியதாவது:-
தனியார் மருத்துவமனை கட்டுமான பணி விபத்து குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராட்சத ஜெனரேட்டர் அறை அமைப்பு பணியில் அடித்தளம் உறுதித்தன்மை இல்லாததால் விபத்து ஏற்பட்டு உள்ளது. தரமற்ற கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டிட காண்டிராக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் விபத்து ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Buildingcollapse #ChennaiBuildingcollapse
சென்னை அருகே தனியார் மருத்துவமனையின் புதிய கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் பலியானார். 33 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி கோவிந்தராஜ் நகரில் கோவையைச் சேர்ந்த ஜெம் குரூப் சார்பில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதே வளாகத்தில் பிரமாண்டமான ஜெனரேட் டர் அறையுடன் கூடிய 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.
இதற்காக 10-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு இதன் மேல் ராட்சத இரும்பு சாரம் கட்டப்பட்டு இருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை திடீரென்று இரும்பு சாரம் சரிந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தது. மருத்துவமனை எதிரில் உள்ள 2 வீடுகள் மீதும் இரும்பு சாரம் விழுந்ததால் பலத்த சேதம் அடைந்தன.
இரும்பு சாரம் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு (23) என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவரது பிணம் உடனடியாக மீட்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
விபத்து குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனம் மீது அலட்சியமாக செயல்பட்டது உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உடனடியாக என்ஜினீயர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கட்டிட விபத்து நடந்த மருத்துவமனையை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. இந்த விபத்தால் அங்கு வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர். சிலர் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
கட்டிட விபத்து நடந்த இடத்தை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், மாநில பேரிடர் மீட்பு கமிஷனர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். #Chennai #Buildingcollapse
சென்னை:
சென்னை அருகே தனியார் மருத்துவ மனையின் புதிய கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் பலியானார். 33 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி கோவிந்தராஜ் நகரில் கோவையைச் சேர்ந்த ஜெம் குரூப் சார்பில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதே வளாகத்தில் பிரமாண்டமான ஜெனரேட்டர் அறையுடன் கூடிய 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.
இதற்காக 10-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு இதன் மேல் ராட்சத இரும்பு சாரம் கட்டப்பட்டு இருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை திடீரென்று இரும்பு சாரம் சரிந்து சுற்றுச் சுவர் மீது விழுந்தது. மருத்துவமனை எதிரில் உள்ள 2 வீடுகள் மீதும் இரும்பு சாரம் விழுந்ததால் பலத்த சேதம் அடைந்தன.
இரும்பு சாரம் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்..
பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு (23) என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவரது பிணம் உடனடியாக மீட்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனையில் 16 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 11 பேரும் சேர்க்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த மோகன், ராஜன், சந்தோஷ் ஆகிய 3 தொழிலாளர்களுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்ததால் முதல் உதவி சிகிச்சை பெற்று திரும்பினார்கள்.
இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி இன்று காலை நடந்தது. சரிந்த ராட்சத இரும்பு சாரங்களை எந்திர கட்டர்கள் மூலம் வெட்டி எடுத்தார்கள். ஜே.சி.பி. எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். இதில் கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனம் மீது அலட்சியமாக செயல்பட்டது உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உடனடியாக என்ஜினீயர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டிட விபத்து நடந்த மருத்துவமனையை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. இந்த விபத்தால் அங்கு வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர். சிலர் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
கட்டிட விபத்து நடந்த இடத்தை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், மாநில பேரிடர் மீட்பு கமிஷனர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். #hospitalbuildingcollapses
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கந்தன் சாவடியில் தனியாரால் கட்டப்பட்டு வந்த கட்டடம் கட்டும் பணியின் போது, எதிர்பாராத விதமாக 21.7.2018 அன்று சாரம் சரிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றவுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, அவர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், பேரிடர் மேலாண்மை ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன்.
எனது உத்தரவின் பேரில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டெடுக்க ஏதுவாக, 7 தீயணைப்பு வாகனங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், 6 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணியிலும்; காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும் பணியிலும், மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சென்னை மாநகர காவல் துறை, மருத்துவத் துறை, நெடுங்சாலைகள் துறை, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பப்லு குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடிபாடுகளில் சிக்கி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பப்லு குடும்பத்திற்கு ரூ.5லட்சம் தொழிலாளர் நல வாரியத்திலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இச் சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்